திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் முக்கிய இலக்காக, முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர்களாகப் பணியாற்றிய பொன்முடி மற்றும் கோவி.செழியன் ஆகிய இருவருமே இருப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. துறை சார்ந்த முடிவுகள், நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை வளையம் விரிவடையும் என்ற தகவல் வெளியானதுமே, இரு தலைவர்களின் ஆதரவாளர்களிடையேயும் அதிர்வலைகள் உருவாகியுள்ளன.

தவெக ஆட்சி அமைந்தது முதலே இவ்விரு மூத்த தலைவர்களும் எவ்வித அரசியல் அறிக்கைகளோ அல்லது கருத்துகளோ தெரிவிக்காமல் முற்றிலும் அமைதி காத்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து ‘சைலண்ட் மோடில்’ இருப்பதற்கு இந்த சாத்தியமான விசாரணை அச்சமே பிரதான காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய அரசின் இந்த நடவடிக்கை, கடந்தகால ஆட்சியின் முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், எதிர்கட்சிகளின் மூத்த தலைவர்களை முடக்குவதற்கான அரசியல் நகர்வா என்ற விவாதமும் தற்போது தீவிரமடைந்துள்ளது.