“சொன்னதை செஞ்சா வேலை நடக்கும்…” ரூ.1 1/4 லட்சத்துக்கு பேரம்… பெண் வி.ஏ.ஓ-வை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகக் கைது செய்துள்ளனர். ஊட்டியை அடுத்த குந்தா தாலுகா எடக்காடு நடுஹட்டி பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர், தனது தந்தை பெயரிலிருந்த நிலத்தை தான செட்டில்மெண்ட் முறையில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாகப் பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை (29) அணுகியபோது, அவர் பட்டா மாற்ற ரூ.1 1/2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த் இதுகுறித்து நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவரிடம் கொடுக்குமாறு உமா பிரியா கூறியுள்ளார். அதன்படி வசந்த் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தைப் பறிமுதல் செய்து கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைக் கைது செய்தனர். பட்டா வழங்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.