ஐயோ… கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே காலி… ஒடிசாவை உலுக்கிய சூறாவளியால்… பீதியில் உறைந்த கிராம மக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் ஏரசமா வட்டத்திற்குட்பட்ட அம்பிகி ஊராட்சியில் திடீரெனக் கொடூரமான சூறாவளி காற்று வீசியது. இந்த கனமழையுடன் கூடிய புயல் காற்றினால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்றினால் பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், இறால் பண்ணை அருகே இருந்த வைக்கோல் மேய்ந்த வீடு ஒன்றும் இப்புயலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

   

https://twitter.com/nextminutenews7/status/2117988903085080932/video/1

   

இந்த எதிர்பாராத சூறாவளி சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தாக்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். உயிர்ச்சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சேதங்களின் முழுமையான அளவு குறித்துத் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.