காலையிலேயே ஷாக்… இவர்களுக்கு இனி மகளிர் உரிமைத்தொகை கிடையாது…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழக்கமான தேதிக்கு முன்பாகவே அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில பயனாளிகளுக்கு இத்தொகை இன்னும் சென்றடையவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் முக்கியக் காரணமாக, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தவறாக இருப்பது அல்லது செயலிழந்து போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் எண் சரியாக இல்லாததால், பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பயனாளிகளுக்குச் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், வங்கிக் கணக்கு விவரங்களில் உள்ள பெயர் பிழைகள், தவறான கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு தவறாக இருப்பது அல்லது நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கியுள்ள (Inactive) வங்கிக் கணக்குகள் காரணமாகவும் பலருக்கு உரிமைத்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் இதுவரை பணம் பெறாத அல்லது வங்கிக் கணக்கு தொடர்பான சிக்கல்கள் உள்ள பயனாளிகள், உடனடியாகத் தங்கள் வங்கி கிளைக்குச் சென்று மொபைல் எண்ணை இணையாகப் புதுப்பித்து, கணக்கு விவரங்களைச் சரிசெய்ய வேண்டும். இந்தத் தவறுகளை விரைவாகச் சரிசெய்வதன் மூலம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமைத்தொகையை எந்தவிதத் தடையுமின்றிப் பயனாளிகள் உடனடியாகப் பெற முடியும்.