இப்படி ஒரு விபரீதமா?… 30 நிமிட மரண பயம்… தொண்டைக்குள் இறங்கிய டூத்பிரஷ்… கடைசியில் நடந்தது என்ன?…!!

By Gayathri on கார்த்திகை 4, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பென் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆட்டோ ஓட்டுநரான ராஜேந்திர மலுசரே, காலை வேளையில் வாய் கொப்பளித்து பல்துலக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக முழு பல்துலக்கியையும் விழுங்கிவிட்டார். உடனடியாக நவி மும்பையில் அமைந்துள்ள மெடிகோவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, விழுங்கப்பட்ட பல்துலக்கி உணவுக்குழாயைக் கடந்து இரைப்பைப் பகுதிக்குள் சிக்கியிருப்பது ஸ்கேன் மற்றும் பரிசோதனை முடிவுகளில் உறுதி செய்யப்பட்டது.

வயிற்றைத் திறந்து செய்யும் பெரிய அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடிவு செய்த மருத்துவ நிபுணர்கள், எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி அதை அகற்ற திட்டமிட்டனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எவ்வித உள் காயங்களும் இன்றி நவீன மருத்துவக் கருவிகளின் உதவியுடன் பல்துலக்கி பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. செயல்முறைக்குப்பின் சீரான உடல்நிலைக்குத் திரும்பிய அவர், அடுத்த சில மணி நேரங்களிலேயே நலமுடன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.