மின் இணைப்புக்கு லஞ்சமா?… ஷாக் கொடுத்த மின்சார வாரியம்… செக் வச்ச ஊழல் தடுப்பு பிரிவு… ஒரு புகாரால் வெடித்த பகீர் உண்மை…!!

By Gayathri on கார்த்திகை 4, 2026

Spread the love

ஆக்ராவில் புதிய மின்சார இணைப்பு கோரி விண்ணப்பித்த அர்ஜுன் என்பவரிடம், அனுமதி வழங்குவதற்காக மின்சார வாரிய ஊழியர்கள் இருவர் ரூ.10,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர். பணத்தைக் கொடுக்க விரும்பாத அவர், இச்சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை அணுகி முறைப்படி புகார் அளித்தார்.

புகாரின் உண்மைத்தன்மையை ரகசியமாக ஆய்வு செய்த அதிகாரிகள், ஊழியர்களைப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதன்படி, திங்களன்று அர்ஜுனிடமிருந்து ஊழியர்கள் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புப் படையினர் அவர்களை உடனடியாக சுற்றிவளைத்துக் கைது செய்தனர். தற்போது இருவரும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.