ஐயோ… 4 முறை செயின் இழுத்தும் யாரும் வரல… ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸில் ரூ 2.5 லட்சம் நகைகள் திருட்டு… கண்ணீருடன் கதறும் பெண் பயணிகள்… லக்னோவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

லக்னோவில் ஆனந்த் விஹார் – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்த பெண் பயணியொருவரின் ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ 25,000 ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டப்பட்டிருந்த கேபினுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளதாக அந்தப் பெண் கண்ணீருடன் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது.

உயர்தர ஏசி பெட்டிகளில்கூட பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தனது குழந்தைக்கு எந்த ஆபத்துமின்றி தப்பியது மட்டுமே நிம்மதியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தின்போது அவசர காலச் சங்கிலியை நான்கு முறை இழுத்தும், ரயில்வே ஊழியர்களோ அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரோ தனக்கு உதவ வரவில்லை என அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

   

இந்தச் சம்பவம் குறித்துப் பரவிய வைரல் காணொளியைக் கவனித்த வடக்கு ரயில்வே , சம்பந்தப்பட்ட ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பிரீமியம் ரயில்களில் அதிகரித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துப் பயணிகள் மத்தியில் இந்தச் சம்பவம் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.