மின்னல் வேகத்தில் வந்த கார்…! நடைபாதையில் ஓய்வு எடுத்த தாய், மகன் துடிதுடித்து பலி… தம்பதியினர் படுகாயம்… கோர விபத்து…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும் அவரது 15 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நவம்பர் 2ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், சாலையோர நடைபாதையில் துணிகள் விற்பனை செய்து வரும் குடும்பத்தினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடைபாதையின் மீது ஏறி அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

   

இந்தக் கொடூர விபத்தில் நடைபாதையில் படுத்திருந்த பூனம்பென் நாக்வாடியா (30) மற்றும் அவரது 15 வயது மகன் சாகர் நாக்வாடியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டுத் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், அங்கு பொருட்கள் வாங்க வந்த கார்த்திக் வசோயா (34) மற்றும் அவரது மனைவி ஸ்னேஹல்பென் ஆகியோரும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

   

விபத்தை ஏற்படுத்திய காரை விட்டுத் தப்பியோட முயன்ற ஓட்டுநர் வைரல் சாவ்ஜிபாய் சவுத்ரியைப் (36) போலிஸார் கைது செய்தனர். சோதனையில் காரில் திறக்கப்படாத 6 பீர் கேன்கள் கண்டெடுக்கப்பட்டதால், மதுவிலக்குச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.