நிலத்திற்காக இப்படியா?… “அவ உயிரோட இருக்கக் கூடாது”… மருமகளை கொன்ற கொடூர குடும்பம்… அதிர வைக்கும் உண்மை பின்னணி…!!

By Gayathri on கார்த்திகை 3, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் அருகே சிந்தல் தாண்டா பகுதியில் நிலத்தகராறு காரணமாக சுனிதா என்ற பெண் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட இவரது கணவருக்குச் சொந்தமான ஒன்றேகால் ஏக்கர் நிலம், குடும்பப் பெரியவர்களின் முன்னிலையில் சுனிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. கணவர் வெளியூரில் இருந்ததால் தாய் வீட்டில் வசித்து வந்த இவர், சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

நிலம் கைமாறிய ஆத்திரத்தில் இருந்த கணவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நால்வர், வயலுக்குச் சென்ற சுனிதாவை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். தலையின் தோலைத் துண்டித்து அவரை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.