அண்ணனுடன் தொடர்பா?… 20 நிமிடம்… 170 முறை குத்து…! காதல் மனைவியை கத்தரிக்கோலால் சிதைத்த கணவன்… நடுங்க வைக்கும் பின்னணி…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், காதலித்துத் தம்பதியான கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடு ஒரு கொடூர வன்முறையாக மாறியுள்ளது. தனது மூத்த சகோதரனுடன் மனைவி ராக்கிக்குத் தகாத உறவு இருப்பதாகக் கணவர் சந்தேகிக்க, மனைவியோ கணவருக்கு அதே கிராமத்தில் உள்ள மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளார். இந்த பரஸ்பர சந்தேகமும் அவநம்பிக்கையும் குடும்பத்திற்குள் கடுமையான வாக்குவாதங்களை உருவாக்கி வந்தன.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக, ஆத்திரமடைந்த கணவர் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது மனைவியைக் கத்தரிக்கோலால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதலில் 26 வயதான ராக்கியின் உடலில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. காதல் திருமணமாக அமைந்த போதிலும், ஒருவருக்கொருவர் ஏற்பட்ட சந்தேகம் இறுதியில் இந்த அதிர்ச்சிகரமான குற்றச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.