“காரை வித்துட்டு லேப்டாப் வாங்குங்க….” மாத தவணை மட்டுமே ரூ.1.61 லட்சமா…? பல லட்சத்தை தாண்டும் ஆப்பிள் லேப்டாப் விலை… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

ஆப்பிள் நிறுவனத்தின் டாப்-எண்ட் மேக்புக் புரோ லேப்டாப்பின் விலை இந்திய சந்தையில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலையை விட அதிகமாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வெளியிட்ட ஒப்பீட்டு வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மொஹ்சின் என்ற நபர், ஆப்பிள் இணையதளத்தில் மேக்புக் புரோ லேப்டாப்பை வாங்கும் போது கிடைக்கக்கூடிய அனைத்து டாப்-எண்ட் அப்கிரேடுகளையும் தேர்வு செய்து காட்டினார். 16-இன்ச் ஸ்பேஸ் பிளாக் மாடலில், நேனோ-டெக்ஸ்டர் டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த M5 மேக்ஸ் சிப், அதிகபட்ச கோர்கள், நினைவகம் மற்றும் ஸ்டோரேஜ் போன்றவற்றைச் சேர்க்கும்போது அதன் இறுதி விலை வரிகளுடன் சேர்த்து சுமார் ரூ. 18 லட்சம் தொடுகிறது.

   

https://www.instagram.com/reel/DfFMfUtsgmp/?utm_source=ig_web_copy_link&vrfl=MzRlODBiNWFlZA==&srtk=MzRlODBiNWFlZA==

   

“சமீபத்தில் ஹூண்டாய் க்ரெட்டா கார் வாங்கினீர்களா? அதை விற்றுவிட்டு இந்த ஆப்பிள் லேப்டாப்பை வாங்குங்கள்” என நகைச்சுவையாகக் கூறிய அவர், இந்த லேப்டாப்பைத் தவணை முறையில் வாங்கினால் கூட மாதத்திற்கு ரூ. 1.61 லட்சம் செலுத்த வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆன்-ரோடு விலை ரூ12.68 லட்சம் முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சொகுசு காரின் விலையை விட லேப்டாப் விலை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய இந்த ஒப்பீடு தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.