இல்லத்தரசிகளுக்கு ஷாக்…. ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை உண்மையிலேயே எப்போது வரும்?…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர்கள் தொடர்ச்சியாகப் பேசி வரும் நிலையில், இதற்கான விரிவாக்கப் பணிகள் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சாத்தியமாகும் என்றத் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதனால், “தேர்தலை மனதில் வைத்தே அமைச்சர்கள் இத்தகைய வாக்குறுதிகளை முன்கூட்டியே அளித்து வருகிறார்களா?” என்றக் கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பலமாக எழுந்துள்ளது. அமைச்சர்களின் தொடர் பேச்சுக்கள் பயனாளிகளிடையே உடனடி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இத்தகவல்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளன.

இருப்பினும், தொகையை உயர்த்துவதற்கு முன்பாக இத்திட்டத்தில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தகுதியுள்ள பலருக்கு நிதி சென்று சேராத குளறுபடிகளைக் களைவதற்கே அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிகிறது. தகுதியிருந்தும் விடுபட்ட மகளிரைச் சேர்ப்பது மற்றும் விண்ணப்பங்களைச் மறுபரிசீலனை செய்து புதிய மாற்றங்களை முறைப்படுத்துவது அவசியம் என்பதால், திட்ட விரிவாக்கத்திற்குச் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, குளறுபடிகளைச் சரிசெய்து தகுதியான அனைவரையும் ஒருங்கிணைத்த பின்னரே உயர்த்தப்பட்ட தொகை முழுமையாகச் சென்றடையும் என்பதை அரசு தெளிவுபடுத்துவதுடன், வாக்குறுதிகளுக்கான சரியான காலக்கெடுவை வெளிப்படையாக அறிவிப்பதே பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும்.