ஐயோ… குழந்தை விழப்போகுது… யாராவது காப்பாத்துங்க… கூரையில் தொங்கிய 3 வயது சிறுவன்… துணிச்சலாக மீட்டு கெத்து காட்டிய இளைஞர்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலநல்லூரில் எல்லாரையும் நெகிழ்ச்சியடைய வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி தம்பதியரின் 3 வயது குழந்தை, வீட்டின் அருகே இருந்த ஒரு சாக்குப்பையைப் படியாகப் பயன்படுத்தி, எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையின் மீது ஏறியுள்ளது.

கூரையின் விளிம்பிற்குச் சென்ற அக்குழந்தை, அங்கிருந்து தவறி கீழே விழும் நிலையில் ஆபத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினரும் பொதுமக்களும் அச்சமடைந்து, குழந்தையை எப்படி மீட்பது என்று தெரியாமல் பீதியில் உறைந்துபோயினர்.

   

அப்போது அங்கு வந்த ஷியாபுதீன் என்ற இளைஞர், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து நொடிப் பொழுதும் தாமதிக்காமல் உடனடியாகச் செயல்பட்டார். சாதுரியமாகவும் துணிச்சலாகவும் கூரையின் மீது ஏறி, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டார். சமயோசிதமாகச் செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஷியாபுதீனுக்கு அப்பகுதி மக்கள் திரண்டு தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.