அட கடவுளே… யூடியூப் பார்த்து மாஸ்டர் பிளான்… 70 லட்சம் சுருட்டிய 25 வயது பெண்… ஹைதராபாத்தை அலறவிட்ட புர்கா திருடி சிக்கிய திகில் பின்னணி…!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

ஹைதராபாத் நகரில் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திய 25 வயதுப் பெண் ஒருவர், திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி கற்று நல்ல எதிர்காலத்தை அமைக்க வேண்டிய வயதில், அப்பெண் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து குற்றச் செயலில் ஈடுபட்டது உள்ளூர்வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024-ஆம் ஆண்டில் திருமணமான இந்த பெண், அதன் பிறகு ஆன்லைன் வீடியோக்களைப் பார்த்து திருடுவது எப்படி என்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டுள்ளார். தனது அடையாளத்தை மறைப்பதற்காக புர்கா மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு, ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் மிகவும் கவனமாகத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

   

தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.