மகாராஷ்டிரா மாநிலம் லாரூரில் உள்ள விலாஸ்ராவ் தேஷ்முக் மார்க்கில் அமைந்துள்ள உமேட் கொரியர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஒரு கொரியர் வாகனத்தில் இருந்து பார்சல்கள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த திடீர் வெடிப்புச் சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பெரும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடனேயே, உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெடிப்பு நடந்த இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவலர்கள், அங்கு சிதறிக்கிடந்த தடய சேகரிப்புகளைத் தொடங்கினர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
https://twitter.com/IndiaToday/status/2116509527990214903/video/1
இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது, பார்சலுக்குள் ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது அபாயகரமான பொருட்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொரியர் பார்சலை அனுப்பிவைத்தவர் மற்றும் பெறவிருந்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்து, சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியும் பணியில் காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
