ஆந்திர மாநிலம் ஜங்காரெட்டிகுடெத்தில் காதலன் ஒருவன் தனது காதலியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலவரம் மண்டலம் தங்கேடிகொண்டா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், உள்ளூரில் உள்ள ஒரு ரொட்டி பாக்கத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபன் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளான். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணை கொடூரமாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
https://twitter.com/Telugufeedsite/status/2116470999634092224/video/1
இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராமகிருஷ்ணாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
