பெங்களூரு கோட்டிகரே பகுதியில் உள்ள குரு கிரீன்ஸ் குடும்ப உணவகத்தில் பணிபுரிந்து வந்த 42 வயதான சந்துரு என்ற நபர், அக்டோபர் 30 அன்று மதிய உணவு அருந்தும்போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உணவகத்தில் அவர் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்த இந்த துயர சம்பவம் உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உடனடியாக சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவியாக சி.பி.ஆர் சிகிச்சை அளித்து மீட்க முயன்றனர்; இருப்பினும் அவர் உணர்வு பெறாததால், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
https://twitter.com/HateDetectors/status/2116509059469939124/video/1
சம்பவம் நடந்த இடம் ஹுலிமாவு காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென நிகழ்ந்த இந்த மாரடைப்பு மரணம் அவரது சக ஊழியர்கள் மற்றும் உறவினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
