போடு ரகிட ரகிட…. தீபாவளிக்கு மெகா ஜாக்பாட்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, வரும் 01.07.2026 முதல் முன்தேதியிட்டு 63 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 28ஆம் தேதி அகவிலைப்படி 60-லிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களின் நலனையும் கனிவுடன் பரிசீலித்து தமிழக அரசும் உடனடியாக இந்த உயர்வினை அறிவித்துள்ளது. வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, அரசுப் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகைக் காலத்தில் கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

   

இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பலனடைவார்கள். ஊழியர்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம், மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,858 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அண்மையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் ரூ. 200 மதிப்பிலான 10 மளிகைப் பொருட்கள் கூட்டுறவு அங்காடிகளில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 48 லட்சம் ஊழியர்களும் 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடையும் 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு இணையான சலுகைகளை மாநில ஊழியர்களுக்கும் தடையின்றி வழங்கி தமிழக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது.