இப்படி ஒரு அவலமா?… பள்ளிக்கூடமா? மரணக் குழியா?… Live-ஆக இடிந்து விழுந்த கூரை… கதறும் பெற்றோர்… நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

By Gayathri on ஐப்பசி 31, 2026

Spread the love

தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்காவின் சொந்தத் தொகுதியான மதிராவுக்கு உட்பட்ட பொனக்கல் மண்டலத்தில் உள்ள அரசு குருகுலப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள எஸ்சி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு அறையின் காரை மற்றும் மேற்கூரை திடீரெனப் பெயர்ந்து விழுந்தது. இதில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த பூஜிதா, கீர்த்தனா என்ற இரு மாணவிகள் பலத்த காயமடைந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளின் தொகுதியிலேயே அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது பெற்றோரிடமும் பொதுமக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் இத்தகைய பழுதடைந்த கட்டடங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.