7 வருஷமா சொல்லி பார்த்தோம்…! ஒன்னும் நடக்கல… முதல்வர் விஜய் கொடுத்த சர்ப்பிரைஸ்… நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ரூ.16 கோடியை உடனடியாக விடுவித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் டி.சிவா தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த திரைப்பட மானியத் தொகை விவகாரத்தில், தற்போது முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டு ரூ.16 கோடி தொகையை விடுவித்துள்ளார்.

   

இதுகுறித்துத் தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையை விடுவித்து, தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

   

இது வெறும் மானியம் அல்ல, பல குடும்பங்களுக்குக் கிடைத்த தீபாவளிப் பரிசு” எனத் தெரிவித்துள்ளார். பயனடைந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தயாரிப்பால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் புதிய படங்களுக்கு அதிகாலை 6 மணி காட்சிக்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.