57 வயதைக் கடந்தும் இளமை தோற்றத்தில் ஜொலிக்கும் நடிகை சுகன்யா… இளம் ஹீரோயின்களையே அழகுல மிஞ்சுறாங்களே….புகைப்படம் உள்ளே…

By Begam on கார்த்திகை 9, 2022

Spread the love

நடிகை சுகன்யாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை சுகன்யா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் 1991ல் வெளி வந்த  ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சின்ன கவுண்டர், கோட்டைவாசல் என பல திரைப்படங்களில் நடித்தார். அதே போல் அப்பொழுது உள்ள முன்னணி  நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.

   

   

இந்நிலையில் தற்பொழுது இவர் ஒரு சில திரைப்படங்களிலும், சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் 2002இல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2003இல் விவாகரத்து பெற்றார்.

 

இதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் 28 வருடங்களுக்கு முன்பு நவரச நாயகன் கார்த்திக் உடன் ‘சின்ன ஜமீன்’ என்ற திரைப்படத்தில் இவர் ஜோடியாக நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் மீண்டும் நவரச நாயகன் கார்த்திக் உடன் இணைந்து ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு ‘தி இவன்’  என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஜெயமுருகன் என்பவர் இயக்க உள்ளார்.

இதை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டத்தில் கூறப்படுகிறது. தற்போது 57 வயதை கடந்த இவர் இளம் நடிகைகளுக்கு போட்டியாக மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.