திடீரென சுருண்டு விழுந்தது ஏன்?… மணப்பெண் மர்ம மரணம்… கதறாத கணவன்… ஹோட்டல் CCTV-யில் பதிவான பயங்கரம்…!!

By Gayathri on ஐப்பசி 27, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன 28 வயது இளம் பெண் முஸ்கான் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் நீலேஷ் மற்றும் விடுதி ஊழியருடன் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்ற அவர், கதவை நெருங்கிய அடுத்த சில வினாடிகளிலேயே திடீரெனப் பின்னோக்கித் தரையில் சரிந்து விழுந்தார். முஸ்கானின் தலை தரையில் பலமாக மோதிய நிலையிலும், கணவர் எவ்வித பதற்றமும் இன்றி மிக நிதானமாக அவரைத் தூக்கி அறைக்குள் கொண்டு செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு விடுதிக்கு அழைத்து வந்ததாகவும், நீலேஷிற்கு ஏற்கனவே இந்தூரில் மற்றொரு மனைவியுடன் திருமணமாகி இருந்ததை மறைத்து முஸ்கானை ஏமாற்றியுள்ளதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்கானின் தலையில் காயங்கள் காணப்படுவதால் இது திட்டமிட்ட கொலை எனத் தெரிவிக்கும் அவரது பெற்றோர், உரிய நீதி கேட்டுப் புகார் அளித்துள்ளனர். தற்போது கணவர் நீலேஷைக் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், அந்த ஐந்து நொடிகளில் அப்பெண் மயங்கி விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறியப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.