ஐயோ கொடுமையே… நகைக்கடையில் வாடிக்கையாளர் போல வந்து… கைவரிசை காட்டிய இரண்டு பெண்கள்… 300 கிராம் தங்கப் பெட்டியை அபேஸ்… அதிர்ச்சி CCTV வீடியோ…!!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

சிசிடிவி கேமரா பதிவு மட்டும் இல்லையென்றால், இந்த அதிர்ச்சி சம்பவத்தை யாராலும் நம்பியிருக்க முடியாது. நகைக்கடைக்கு வந்த இரண்டு பெண்கள், தங்கம் வாங்குவது போல நடித்து அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர். கடையில் கூட்டம் இருந்த சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தங்களின் திட்டத்தை நேர்த்தியாகச் செயல்படுத்தியுள்ளனர்.

அவர்கள் கடை ஊழியர்களைப் பல்வேறு நகைகளைக் காட்டுமாறு கேட்டுப் பேசி முடக்கியுள்ளனர். ஊழியர் வேறு நகைகளை எடுக்கச் சென்ற தருணத்தில், சுமார் 300 கிராம் எடையுள்ள தங்க நகைப் பெட்டியை மிக லாவகமாக எடுத்துத் தங்களது பையில் மறைத்து வைத்துள்ளனர். அவர்களின் இந்தத் துரிதமான கைவரிசை கடையில் இருந்த மற்ற எவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

   

https://twitter.com/Ayesha786Majid/status/2114894226144350436/video/1

   

நகைப் பெட்டியைத் திருடிய பிறகு, கடையில் எந்த நகையும் பிடிபடாதது போலக் காட்டி, எதுவும் வாங்காமலேயே இயல்பாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் நகைப் பெட்டி காணாமல் போனதைக் கண்டு சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதே, அப்பெண்களின் சாதுரியமான திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது.