சொந்த ஊருக்கு வரக்கூட அவமானமா இருக்கு?… தவெக செய்வது அன்பளிப்பு இல்லை… வார்த்தை லஞ்சம்… சிவகங்கையில் உடைந்து பேசிய சீமான்…!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த ஊரான சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். தன்னை தேர்தலில் தோற்கடித்துவிட்டு இப்போது அங்கே குற்றங்கள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தன் சொந்த ஊருக்குள் வர வேண்டிய சூழலில் தனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருப்பதாக ஓப்பனாகத் தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கடந்த ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது என்றும், முறையான மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்போது அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறினார். மேலும், தவெக அரசு மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்கால ஆய்வுகள் குறித்தும் தனது கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்.

   

தேர்தல் வாக்குறுதிகளாகவும் நலத்திட்டங்களாகவும் வழங்கப்படும் பண உதவி, தாலிக்கு தங்கம், சிலிண்டர் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கான உதவித்தொகை போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய சீமான், மக்கள் பணத்தில் இருந்து வழங்குவதை ‘அன்பளிப்பு’ என்று கூற முடியாது என்றார். இதனை நேரடிப் பணப் பரிமாற்றம் மட்டுமின்றி வாக்குறுதிகளால் செய்யப்படுவதைக் குறிக்கும் வகையில் “வார்த்தை லஞ்சம்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.