முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அன்பில் மகேஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை மற்றும் சட்ட வட்டாரங்கள் தெரிவிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அவர் மீதும் தொடர்புடைய நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் உத்தரவால் அன்பில் மகேஸுக்குச் சட்டரீதியான நெருக்கடி பலமடங்கு அதிகரித்துள்ளது.