‘Dummy Daddy’ முதல் ‘Sweet Uncle’ வரை… ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக…. “அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி”…. பரபரக்கும் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில், திருமண மேடைகளை அரசியல் விமர்சனத்திற்கான தளமாக திமுக தலைவர்கள் மாற்றுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்து பேசியது கடுமையான எதிர்வினையைத் சம்பாதித்துள்ளது. மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்தைக் கண்டித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அரசியல் மூர்த்தி “Sweet Uncle”, “Dummy Daddy” என்றெல்லாம் கிண்டலடித்துள்ள தவெக ஐடி விங், தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் தொடர்ந்து ‘ஒப்பாரி’ வைப்பதாகவும், தவெக அரசு அமைத்து 5 மாதங்கள் கடந்து இடைத்தேர்தல் வெற்றியுடன் நல்லாட்சி வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளது.

   

https://twitter.com/TVKHQITWingOffl/status/2114344995507556715/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2114344995507556715%7Ctwgr%5Ea77bc6acebcb216eb490898c11f7762b96f14f65%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fnews%2Ftamil-nadu%2Ftvk-it-wing-criticise-mk-stalin-speech-against-cm-vijay-government-278215

   

இதனிடையே, புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்த வேண்டிய மங்கலகரமான திருமண மேடைகளில், “இந்த ஆட்சி நிலைக்காது, தாங்காது” என்று திமுக தலைவர்கள் அவதூறாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் கொதித்தெழுந்துள்ளனர். ஒரு மங்களகரமான நிகழ்வில் இதுபோன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவது அபசகுணம் என்றும், இது திமுகவினரின் தேர்தல் தோல்வி விரக்தியையே காட்டுகிறது என்றும் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

 

அரசியல் அரங்கில் தேர்தல் வெற்றிகள் மூலமாக தங்களது பலத்தை நிரூபித்து வரும் தவெகவுக்கும், அதிகாரத்தை இழந்த சோகத்தில் இருக்கும் திமுகவுக்கும் இடையேயான இந்த வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. திருமண மேடைகளில் தொடங்கும் இந்த அரசியல் விமர்சனங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் அனல் பறக்கும் விவாதங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன.