சூப்பரோ சூப்பர்..! தரமான சம்பவம்..! 10 கிலோ எடையா?… தூக்கு மாட்டவே முடியாது?… “மேஜிக் ஃபேன்”… காலேஜ் செஞ்ச வேலைய பாருங்க…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நவீன முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. கல்வி மற்றும் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுகளைத் தடுப்பதற்காக, விடுதி அறைகளில் சிறப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்மார்ட் மின்விசிறிகள்” பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த மின்விசிறிகளில் தானியங்கி முறையில் இயங்கும் தனித்துவமான ஸ்பிரிங் அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மின்விசிறியின் மீது 10 கிலோவுக்கும் அதிகமான பாரம் அல்லது எடை செலுத்தப்படும்போது, அதிலுள்ள ஸ்பிரிங் விரிவடைந்து மின்விசிறியை தானாகவே கீழ்நோக்கிச் சாய்த்துவிடும். அத்துடன், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக அதன் மின் இணைப்பும் துண்டிக்கப்படும் விதத்தில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

   

தொழில்நுட்பத்தை மனித உயிர்களைக் காக்கும் அரணாகப் பயன்படுத்தும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. மாணவர் நலனில் அக்கறை கொண்டு விடுதி வளாகங்களில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.