அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுசி?… காதலனுடன் உல்லாசமாக இருக்க ஆசை.. அழுதுகொண்டிருந்த 8 மாத பச்சிளம் குழந்தையை… கொடூரமாகக் கொன்ற தாய்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று 8 மாத பெண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்போதே இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டாலும், குற்றவாளிகளை உடனே அடையாளம் காண முடியாததால் நீண்ட காலமாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த மஞ்சு (45) என்ற பெண்ணுக்கும் அவரது காதலன் சிவாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், குழந்தையின் கொலை குறித்து இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிப் பேசியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் சமூக நல ஒருங்கிணைப்பாளருக்குத் தகவல் தெரிவிக்க, அதன் அடிப்படையில் காவல்துறையினர் மஞ்சுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

   

விசாரணையில், காதலனுடன் உல்லாசமாக இருக்க குழந்தை இடையூறாக இருந்ததால், 2023 ஆகஸ்ட் 8 அன்று பேருந்து நிலையத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொன்றதாக மஞ்சு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொடூரச் செயலில் நேரடித் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவா மற்றும் உடலை மறைக்க உதவிய அவரது சகோதரர் சக்தி ஆகிய இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.