சீனாவின் திபெத் பகுதியில் உள்ள நக்சு நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் பேரழிவில் சிக்கி குறைந்தது 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 46-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கால்நடைத் தொழுவங்கள் தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட நடுக்கத்தில் பீதியடைந்த மக்கள், கட்டடங்களை விட்டு அலறி அடித்து வெளியே ஓடிவரும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளில் பதிவாகியுள்ளன.
https://twitter.com/IndianExpress/status/2113498293976400040/video/1
இதனைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் தீவிர மீட்புப் பணிகள் அப்பகுதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
