உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியில், பிரமோத் என்பவரது கொலை வழக்கில் அவரது மனைவியும், கள்ளக்காதலன் சிக்கந்தர் என்பவரும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். டேராடூனில் புதிதாக வாழ ஆசைப்பட்ட கள்ளக்காதலர்கள் , பிரமோத்திற்கு குடிப்பானத்தில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் கிணற்றடிப் பகுதியில் வைத்துத் தீர்த்துக்கட்டியுள்ளனர்.
பிரமோத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களின் வாட்ஸ்அப் சாட் தகவல்கள் மூலமாகக் கொடூரக் காதலின் சதித் திட்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொன்ற மனைவியின் இந்த வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
