ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு தள்ளிய பெண் ஐபிஎஸ் அதிகாரி… வெடித்த சர்ச்சை…!வைரலான வீடியோவால் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்… பரபரப்பு…!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாந்த்கான் மாவட்டத்தில், விஜயதசமி பண்டிகையையொட்டி நடைபெற்ற ‘சாஸ்திர பூஜை’ எனப்படும் ஆயுத பூஜையின் போது, ஐபிஎஸ் அதிகாரியான அங்கிதா சர்மா சேலை அணிந்தபடி ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகக் கூறி அந்த மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குக் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆயுதங்களைக் கையாளுவதிலும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் பின்பற்றுவதிலும் அதிகாரிகள் இதுபோன்று அலட்சியமாக இருப்பது சரியா என்ற விவாதம் தற்போது தேசிய அளவில் தீயாகப் பரவி வருகிறது.