கடவுளே… மனிதநேயம் செத்து போச்சா?… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… உயிரை காப்பாற்றாமல் கதறியவர்கள் மீது… ஆடி காரை ஏற்றி கொன்ற கொடூரன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ஜிடி சாலையில், அக்டோபர் 20 அன்று இரவு சுமார் 11:10 மணியளவில் பன்னாதேவி காவல் நிலையப் பகுதிக்கு அருகில் இந்த அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ஆடி கார் ஒன்று, இருசக்கர வாகனம் மீது பின்னால் பயங்கரமாக மோதியதில் அதில் பயணம் செய்த ஒருவர் காற்றில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மனோஜ் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தும் காரை நிறுத்தாமல் ஓட்டுநர் செய்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. காரை நிறுத்த முயல்வதற்குப் பதிலாக, ஓட்டுநர் அதனைப் பின்னோக்கிச் செலுத்தி, கீழே கிடந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் வேண்டுமென்றே ஏற்றிச் சென்றுள்ளார். மனிதநேயமற்ற இந்தச் செயலை அங்கிருந்தவர்களின் சிசிடிவி கேமரா தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

   

https://twitter.com/ndtv/status/2113234509990895917/video/1

   

விபத்து ஏற்படுத்திய பதற்றத்திற்குப் பிறகு, ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய ஆடி கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அலிகர் நகரில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.