சாக்கடையில் கிடந்த இளம்பெண் உடல்… “வாயில் துணியை திணித்து கொன்றேன்…” கணவரின் பரபரப்பு வாக்குமூலம்… அதிர்ச்சி பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

பெங்களூரு மகாடி ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலபுரா சாக்கடையில், கடந்த அக்டோபர் 13 அன்று பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டுக் கிடந்த பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரைச் சேர்ந்த முகமது இர்ஃபாஜ் (22) மற்றும் ருக்சானா (25) தம்பதியினர், சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்து கார்மென்ட்ஸில் வேலை செய்து வந்துள்ளனர். ருக்சானா வேறு ஒருவருடன் தொலைபேசியில் பேசி பழகியதாகச் சந்தேகப்பட்ட இர்ஃபாஜ், கடந்த அக்டோபர் 10 அன்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் அவரைக் கல்லால் தாக்கியும், வாயில் துணியைச் திணித்தும் கொலை செய்துள்ளார்.

   

பின்னர் அடையாளம் தெரியாத நபரின் பைக்கின் பூட்டை உடைத்து அதில் சடலத்தை வைத்து சாக்கடையில் வீசிவிட்டு ஊருக்குத் திரும்பியதாக நாடகமாடியுள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, கொலையாளி இர்ஃபாஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.