டேய்… மாட்டுக்கறி சாப்பிடுவியா?… சாதியத் துன்புறுத்தலால்… 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறும் தந்தை… மனதை உலுக்கும் சோகம்…!

By Swetha on ஐப்பசி 22, 2026

Spread the love

கோவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர் அகிலன், அங்குள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்குப் பிறகு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர், மதிய வேளையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தன் மகன் அகிலனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சாதிய துன்புறுத்தலே காரணம் என்று அவரது தந்தை அசோக்குமார் மற்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியில் ஆசிரியர்கள் சிலர் மாணவனின் சாதியைக் குறித்தும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தும் கேட்டு அவமானப்படுத்தியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் சட்டப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.