திக் திக் நிமிடங்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… விபத்தில் கார் இரண்டாகப் பிளந்து முதியவர் பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

By Swetha on ஐப்பசி 22, 2026

Spread the love

யாலோவா – பர்சா நெடுஞ்சாலையில் 75 வயதான நைம் அர்ஸ்லான் என்ற முதியவர் ஓட்டிச் சென்ற கார் மீது அதிவேகமாக வந்த சிற்றுந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் காரின் நடுபகுதி பலத்த சேதமடைந்து இரண்டாகப் பிளந்தது. இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர விபத்தில் காரைச் செலுத்திய நைம் அர்ஸ்லான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிற்றுந்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

   

https://twitter.com/Haberturk/status/2113184072092512711/video/1

   

தற்போது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது வாகனக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.