“2 மாதங்கள் கழித்து உடைந்த மர்மம்…” 46 வயது பெண்ணை கொன்ற 21 வயது வாலிபர்… சந்தேகத்தால் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் ரோனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லாப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயக் குட்டை ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கௌரவ்வா (46) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 வயது இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் பகுதியைச் சேர்ந்த கௌரவ்வா என்பவரைக் கொன்றது ரோனா தாலுகா ஹோன்னாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் பீமப்பா தாலவார் (21) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கௌரவ்வா வேறு சில ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரகாஷ், அவரை மோட்டார் சைக்கிளில் குட்டைப் பகுதிக்கு அழைத்துச் சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.

   

அப்போது ஆத்திரமடைந்து அவரது தலையில் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலைத் குட்டையில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். மேலும் அவரது உடை, செருப்பு மற்றும் செல்போனை வேறு இடத்தில் வீசிவிட்டு வழக்கம் போல் ஆடு மேய்க்கும் வேலையைத் தொடர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2.5 மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.