எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர மோதல்… ஏசி பெட்டிக்குள் புகுந்து பயணிகளை இழுத்து சென்று தாக்கிய கேண்டீன் ஊழியர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில், தில்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த துருந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீதான பான்ட்ரி ஊழியர்களின் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் செயின் புல்லிங் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டதை அடுத்து, ரயிலுக்குள் புகுந்த பான்ட்ரி உணவு விநியோக ஊழியர்கள், ஏசி பெட்டியில் இருந்த பயணிகளை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் வன்முறைக் களமாக மாறியபோதும், பாதுகாப்பிற்கு ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே அங்கிருந்ததாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருவதுடன், உடனடியாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீவிர கோரிக்கைகள் எழுந்துள்ளன.