“ஒவ்வொரு மணி நேரமும் போன் போட்டு விசாரிப்பேன்”….. முதலமைச்சரின் உத்தரவும், அமைச்சரின் அதிரடி ஸ்பீடும்….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பணிகளைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மழைநீர் வடிகால் மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தேங்கி நின்ற மழைநீர், தற்போது அரசின் துரித நடவடிக்கைகளால் நான்கிலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள்ளாகவே முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு வருவதாகச் பெருமிதத்துடன் தெரிவித்தார்.