நள்ளிரவில் பயங்கரம்…! ஆப்பில் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஓட்டுனர் செய்த காரியம்… மிரண்டு போன பயணி…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் நள்ளிரவில் ராபிடோ பைக் மூலம் பயணம் செய்த பயணியைக் கத்தியைக் காட்டி மிரட்டிச் செல்பேசியைப் பறித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் செக்டார் 5 அசோக் விஹாரிலிருந்து செக்டார் 72ஏ பகுதிக்குச் செல்வதற்காக நள்ளிரவு 1 மணி அளவில் நபர் ஒருவர் ராபிடோ பைக் புக் செய்துள்ளார்.

பாதியிலேயே ஓட்டுநர் செயலியில் பயணத்தை ரத்து செய்துகொண்டு, பாதுகாப்பற்ற தனிப்பாதையில் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பயணியின் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ‘ரெடிட் தளத்தில் பதிவிட்டு காவல்துறை மற்றும் ராபிடோ நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்தச் செய்தி தற்போது தேசிய அளவில் வைரலாகி வருகிறது.