சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி பொதுமக்கள் காயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சேலம் – ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாலைப் பராமரிப்புப் பணிகளின் குறைபாடுகளால் தான் இந்த விபத்துகள் தொடர்ந்து நடப்பதாகக் குற்றம்சாட்டி வரும் பொதுமக்கள், விபத்துகளுக்குக் காரணமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
