“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் ‘சாப்’ என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அபிஜித் திப்கே என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், குற்றவாளிகளை நோக்கி காவல்துறை அதிகாரி காட்டும் இந்த முறையற்ற மரியாதை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கடுமையான சட்டங்களின் கீழ் அடக்கும் காவல் துறையினர், கொடூரக் குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோியை இவ்வளவு மரியாதையாக நடத்துவது ஏன் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர், அந்த வீடியோ பழையது என்றும், அந்த வார்த்தை தற்செயலாக வாய் தவறி பேசியது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.