“அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா…? கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்…! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி… வைரலாகும் போட்டோ…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடிய வேளையில், தனது நெற்றியில் திருநீறு பூசி, நடிகர் கூல் சுரேஷுக்கும் விபூதி பூவிட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வைரலையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கோவில் நிகழ்வு ஒன்றில் தமக்கு இடப்பட்ட விபூதியை அவர் துடைத்ததாகச் சொல்லி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் விழாவில் பங்கேற்றபோது தனது நெற்றியில் பிரகாசமாகத் திருநீறு அணிந்திருந்த திருமாவளவன், அங்கு வந்திருந்த பிரபல நடிகர் கூல் சுரேஷுக்கும் தன் கரங்களால் விபூதி பூசிவிட்டுள்ளார். “இப்போ அண்ணன் நெத்தியைப் பார்த்தீங்களா?” என்று விமர்சகர்களுக்குக் கடுமையான பாணியில் அவர் பதிலடி கொடுத்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.