உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டம் கோத்வாலி பகுதிக்குட்பட்ட புர்ரா கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக அருகில் இருந்த மற்றொருவரின் நிலத்திற்குள் சென்றதால் இக்கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமி தன் நிலத்திற்குள் நுழைந்ததை அறிந்த நிலத்தின் உரிமையாளர், அக்குழந்தையைப் பிடித்து கயிற்றால் கட்டிலில் கட்டிப்போட்டுள்ளார். சிறுமி தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுது கெஞ்சிய போதிலும், அந்த மனிதர்களின் மனம் இரங்காமல் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர்.
https://twitter.com/ashishpaswan0/status/2112124356990222729/video/1
சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற வன்கொடுமை குறித்த தகவல் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கோபமும் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
