“அப்பாவுக்கு இதுதான் நடந்தது… என்னை பார்த்துக்கொள்ளுங்கள்…” கண்ணீருடன் பேசிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா… இணையத்தை உலுக்கும் வைரல் பேச்சு…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தையும் வைரலையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த அக்டோபர் 17 அன்று வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தேவா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் சக்கரமல்லூர் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் தேவா, தனது தந்தை மிகவும் ஒழுங்கான உணவுமுறைகளையும், நேரக் கடைப்பிடிப்பையும் பின்பற்றிய போதிலும் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததை எண்ணிக் கண்ணீர் மல்கக் கூறினார். மேலும், நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் பெருமளவில் கலந்துகொண்ட மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். “அப்பாவை தமிழ்நாட்டு மக்கள் பயங்கரமாகக் கொண்டாடினார்கள்; இனிமேல் என்னை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்ததுடன், சொந்த ஊரில் தேவாவுக்கு மணிமண்டபம் கட்டவிருப்பதாகவும் தெரிவித்தார்.