உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் ஒரு ஷாக்கிங் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு இளைஞர் தனது சொந்த இரத்த உறவான தாய்மாமன் மனைவியுடன் ஓடிப்போன விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கேள்விப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர், தனது மனைியைத் தேடி மருமகனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் நியாயம் கேட்டுப் புகார் அளித்தபோது, அந்த இளைஞர் மாமாவைத் தாக்கியுள்ளார். அவரைத் தரையில் தள்ளி பலமுறை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/RajuSharmajour1/status/2111763696683028880/video/1
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாமா தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இதற்கிடையே, தன் கணவனை விட்டுவிட்டு அந்தப் பெண்ணும் அந்த இளைஞருடன் மகிழ்ச்சியாகச் சுற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவுகளை மாற்றி அமைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
