டெல்லி-டேராடூன் விரைவுச் சாலையில், டேராடூனின் ஆஷாரோடி பகுதியில் சாலைக் குறியீடுகளைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரப் பேனர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சாலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முதல் ஐந்து விபத்துகள் நடந்துள்ளன.
இந்த அடுத்தடுத்த விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் சிலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்தப் பேனரே ஓட்டுநர்களின் கவனத்தை திசைதிருப்பி விபத்துகளுக்கு காரணமாக அமைந்ததோ என்ற அச்சமும் விவாதமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
https://twitter.com/IndiaToday/status/2111748186016829896/video/1
இருப்பினும், இந்த விபத்துகளுக்கும் அந்த விளம்பரப் பேனருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
