“மன்னிப்பு கூட கேட்கல…” குழந்தையை தள்ளி விட சென்ற சிறுவன்… கண்டுக்காமல் அழைத்து சென்ற தாய்… இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

கேஃபெ ஒன்றில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் தனது தோழியுடன் குழந்தையை வண்டியில் அமரவைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த சிறுவன் ஒருவன் குழந்தையின் மீது பாய்ந்து அதனைத் தலைகீழாகக் கவிழ்க்க முயன்ற விபரீதச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் தாயார் தன் மகனின் செயலைத் தட்டிக்க கேட்காமலும், பாதிக்கப்பட்ட உக்ரைன் பெண்ணிடம் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்புக்கூடக் கேட்காமலும் அலட்சியமாக அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், மனநலம் குன்றிய குழந்தையாக இருக்கலாம் எனச் சிலர் நியாயம் கற்பிப்பதையும், பெற்றோர்களின் இத்தகைய அலட்சியத்தை வன்மையாகக் கண்டித்து நெட்டிசன்கள் கடுமையான விவாதங்களை முன்னெடுத்து வருவதையும் இப்பதிவு காட்டுகிறது.