“இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய ஸ்கூட்டர்…” துடிதுடித்து பலியான தம்பதி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி வட்டப்பாறைப் பாலத்தில் இரண்டு கனரக லாரிகளுக்கு நடுவே சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரண்டு கனரக லாரிகளுக்கு இடையில் சென்ற தம்பதியின் ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டது.

பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி விழுந்த இருவரும் லாரிகளுக்கு நடுவே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கனரக வாகனங்களின் ப்ளைண்ட் ஸ்பாட் மற்றும் அதிவேகப் போக்கே விபத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.