பிரிட்டிஷ் பெண் பயணி ஒருவர் டெல்லி மெட்ரோ நிலைய கட்டிடத்திற்குள் வெறும் 400 ரூபாய்க்குத் தங்கும் விடுதி ஒன்றைக் கண்டுபிடித்துத் தங்கிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லிக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள மியா நிகோல் என்ற பிரிட்டிஷ் பெண் பயணி, தனது தோழியுடன் இணைந்து நியூ டெல்லி ரயில் நிலையம் எதிரே உள்ள மெட்ரோ கட்டிடத்தில் அமைந்துள்ள ‘மெட்ரோ ஸ்டே’ என்ற பட்ஜெட் விடுதியில் ஒரு இரவைக் கழித்துள்ளார்.
ஆரம்பத்தில் வெளித்தோற்றத்தைப் பார்த்துச் தயங்கினாலும், உள்ளே அறைகள் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்டு அவர் வியந்துள்ளார். பெரிய லாக்கர்கள், கீபேடு லாக் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வெறும் சுமார் ரூ.400-க்கு இந்த அறை கிடைத்தது தமக்கு அதிர்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதிகாலை ரயில்களில் பயணம் செய்வோருக்கு இது ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வு எனப் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் அதேவேளையில், சிலர் இதுகுறித்து விவாதித்தும் வருகின்றனர்.
