“பூனைக்குட்டியை காப்பாற்றிய சிறுவனுக்கு உதவிய பள்ளி பேருந்து ஓட்டுநர்…” வேலையை விட்டு நீக்கியதால் சர்ச்சை… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் செய்தி…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

அமெரிக்காவில், 11 ஆண்டுகளாகச் பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 67 வயது பெண்மணி சிந்தியா மோர்கன் என்பவர், சிறுவன் ஒருவன் காயமடைந்த பூனைக்குட்டியைக் காப்பாற்றப் பேருந்தை நிறுத்த உதவியதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குச் செல்லும் வழியில் தனிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த ஒரே பயணியான 10 வயது சிறுவன் சாலையோரத்தில் காயம்கிடந்த பூனைக்குட்டியைக் கண்டுள்ளான். அவனது கோரிக்கையை ஏற்றுச் சிந்தியா பாதுகாப்பாகப் பேருந்தை நிறுத்தி, அந்தப் பூனையைக் காப்பாற்ற அனுமதித்துள்ளார்.

   

ஆனால், விதிகளை மீறியதாகக் கூறி மாவட்டப் போக்குவரத்துத்துறை அவரது சான்றிதழை ரத்து செய்து வேலையைப் பறித்துள்ளது. மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுத்ததற்காக வழங்கப்பட்ட இந்தக் கடுமையான தண்டனைக்கு எதிராக 10,000-க்கும் மேற்பட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பீட்டா அமைப்பும் கல்வி வாரியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளதால் இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.